வெய்யோனொளியை…..
பல்லவி
வெய்யோனொளியைப் பழிக்கும் ஶ்ரீராமனை
உய்யவந்த பெருமாளைக் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
தையலாள் ஜானகியும் இளைய பெருமாளும்
பைய உடன் செல்லும் தசரத குமாரனை
சரணம்
மையின் கருநிறமோ மரகதப்பச்சையோ
பெய்யும் மழை முகிலோ கடலின் நிறமோ
ஐயோ இவன் வடிவு அழியாத பேரழகோ
ஐயம் தரும் அதிசயமேயென்றே பரவசித்து
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளோடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்
No comments:
Post a Comment