Sri Gnana Venugopala Swami of Gnanananda Thapovanam, Thirukoilur, India.
கொண்டல் வண்ணனைக் கோவலனாய், வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!
மனதை மயக்கும், என் உள்ளம் கவர்ந்த, ஶ்ரீ ஞான வேணுகோபால ஸ்வாமி ! திருக்கோயிலூர் ஶ்ரீஞானாநந்த தபோவனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் காட்சி!
உனையன்றி…..
பல்லவி
உனையன்றி வேறு தெய்வம் எனக்கில்லை அரங்கனே
எனையாட்கொண்ட கேசவனே வேணுகோபாலனே
அனுபல்லவி
அனைத்தும் நீயெனவே அறிந்துகொண்டேன் மாயவனே
நினைவிலும் கனவிலும் உன்னுருவே கண்டேன்
சரணம்
கண்டவர் மனம் மயங்கும் மேனியுடையவனாய்
மண்ணையுண்டு ஈரேழுலகம் காட்டும் மாதவனாய்
பெண்ணணங்கின் மானம் காத்த மாயக்கண்ணனாய்
கண்ட என் கண்கள் வேறொன்றும் காணாதே
No comments:
Post a Comment