சரணாலயம் அத்தியாயம் 6
“ செல்லையா”
இன்றைய வாழ்வியலில் பெற்றோருக்கான இடம்என்ன என்பதை தீர்மானிப்பதில் நாகரீக உலகம் ஒருபெரும் பின்னடைவில் இருக்கிறது. பெற்றோரின் உழைப்பு – ஆரோக்கியம் – செல்வம் – அனைத்தையும் சுரண்டிக் கொண்ட பிள்ளைகள்அவர்களுக்காக செலவு செய்ய, நேரம் ஒதுக்கக் கணக்குப் பார்க்கிறார்கள். பெற்றோரை புறக்கணிப்பது ஒரு பக்கம் சகஜமாகநடக்கிறது.
இன்னொரு சாரார் “உங்களுக்கான எங்களதுகவனமும் மரியாதையும் இவ்வளவு தான்இதற்குள்ளாக நீங்கள் திருப்திப் பட்டுக் கொள்ளவேண்டும்” என்று பெற்றோரிடம் சொல்லாமல்சொல்கின்றனர்.
சமீபத்தில் பத்திரிகையில் படித்தது மன வேதனையை அளிப்பதாக இருந்தது. திருவான்மியூரில் ஒரு வீட்டில் வசிக்கும்இளைஞன் தன் மனைவிக்கும் அம்மாவிற்கும்இடையே நடக்கும் சண்டையை தவிர்க்க முடியாமல்தவித்து ஒரு கட்டத்தில் அம்மாவை சில நாட்கள்முதியோர் இல்லத்தில் தங்கவைக்க ஏற்பாடுசெய்கிறான். அடுத்த நாள் அவனுக்கு பேரதிர்ச்சிகாத்திருந்தது. அவனது தாய் உடலெல்லாம் காயமாக வீட்டுக்கு ஓடி வந்தாள். அவளை மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்க வேண்டி வந்தது. காரணம் என்னவெனில் முதியோர் இல்லத்தில்சேர்க்கப்பட்ட சில மனிநேரத்தில் அந்த அம்மா என்மகனை வரச் சொல்லுங்கள் நான் என் மருமகளோடு சமரசமாகிப் போய்விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். எங்கே பாட்டி மகனோடுதிரும்பி போய்விட்டால் அட்வான்ஸ் தொகை திருப்பிகொடுக்க வேண்டியது வருமோ என்ற பயத்தில் அந்தமூதாட்டியை முதியோர் இல்லத்தார்அடித்திருக்கிறார்கள். அடிபட்ட உடலோடு அந்தஅம்மா சுவறேரிக் குதித்து வீட்டைத் தேடி ஓடிவந்திருக்கிறார். அதற்குள் அவரது உடலெல்லாம்காயம். மருத்துவ மனையில் பல நாள் தங்கியிருந்துஅவர் சிகிட்சை பெற வேண்டியிருந்த்து. ஒரு மகனே காசு கொடுத்து அம்மாவுக்கு அடிவாங்கிக்கொடுத்த அந்த அதிர்ச்சி தகவலை ஜீரணிக்க இன்றுவரை இயலவில்லை.
இப்படி சோக க்கதைகள் பலப்பல. இதோ சரணாலயத்தில் சமீபத்தில் சேர்ந்த செல்லையாவின் கதையைக் கேட்போம். செல்லையாவுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். அவர்கள் அனைவரையும் படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்து விட்டார். அவருக்கு பராலிட்டிக் ஸ்ட்ரோக் எனப்படும் முடக்குவாதம் வந்து ஒரு கால் ஒரு கை இயக்க முடியாமல் போய்விட்டது. . இனி எந்த வேலையும் செய்ய முடியாத நிலை. அவர் மனைவி வள்ளிக்கோ சொரியாசிஸ் எனப்படும் தோல் வியாதி. மூத்த மகனுடன் தான் அவர்கள் தங்கி வந்தனர். அவன் வேலை கிடைத்து வெளிநாடு சென்று விட்டான். அவனை வெளிநாட்டுக்கனுப்ப தன் சேமிப்பில் பெரும் பகுதியை செல்லையா செலவழித்தார். மகன் வெளிநாடு போய் கைநிறைய சம்பாதித்து அனுப்புவானென எதிர் பார்த்துக் கவலையின்றி இருந்தார். மூத்த மருமகளோ அவர்களை மதிக்காம மாட்டாரள். மேலும் அரசல் புரசலாக ஏச்சு பேச்சுப் பேசுவாள். நாளாக ஆக நேராகவே ஏசத்தொடங்கினாள். அதனால் இன்னொரு மகனைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை. அவனது வீட்டிலோ மருமகளின் தாயர் உடனிருந்ததால் தொடர்ந்து அவர்அகளிருவராலும் அவமதிக்கப்பட்டனர். அப்படிச் செய்தால்தான் இவர்களாக வெளியேறு வார்கள் என்ற தந்திரத்தை மகளின் தாய் மகளுக்கு போதித்து அப்படி நடத்திவந்தனர். இதனிடையே செல்லையாவின் மனைவி நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டாள். செல்லையாவின் நிலை இன்னும் மோசமாகியது. மகனிடம் தன் கஷ்டங்களை வாய்விட்டு சொல்லியும் அவன் மனைவி சொல்லே மந்திரமென அவரை உதாசீனப் படுத்தினான். தன் சேமிப்பையெல்லாம் மூத்த மகன் வெளிநாடு செல்லவும், மனைவியின் மருத்துவச்செலவுக்கு கொடுத்து விட்டு கையில் பணமில்லாமல் நொந்து போயிருந்தார். தன் மகனும் மருமகளும் தன்னைக் கேவலமா நடத்துவதை நினைத்து நினைத்து மனம் நொந்தார். அவருக்கிருந்த ஒரே ஆத்ம சிநேகிதர் சுப்பையாதான் அடிக்கடி வந்து பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு பழமங்கள், தின்பண்டம், மாற்றுடை என வாங்கிக் கொடுத்துவிட்டுச் செல்வார். பணமாக க்கொடுத்தால் அவர் மகனோ மருமகளோ பிடுங்கிக் கொள கிறார்களென்றறிந்து இப்படிச் செய்வார். அவரும் வயதாகி ஓய்வு பெற்றவர். ஏதோ தன் சேமிப்பிலும் மனைவி வழி வந்த சொத்தாலும் காலத்தை ஓட்டி வருகிறார். பிள்ளைக்குட்டிகள் கிடையாது. செல்லையாவுக்கு கை கால் ஊனமுற்றுப் போனாலும் ஏதோ முடிந்தவரை தன் வேலையை தானே பார்த்துக் கொண்டு இளைய மருமகள் ஏச்சுப் பேச்சுக்களைக் காதில் போட்டுக் கொள்ளாமல் காலத்தை ஓட்டி வந்தார். இதற்கிடையே மூத்த மகன் விடுப்பில் ஊர் வந்திருந்தான். மனைவி தந்தையை உதாசீனப் படுத்தியதையும் தம்பியும் தம்பி பெண்டாட்டியும் அவரை கேவலமாக நடத்தி வருவதையுமறிந்து மிக மிக வேதனைப்பட்டான். முப்பது நாட்களே அவனுக்கு லீவு இருந்தது. இதனிடையில் என்ன செய்வதென்றறியாமல் தடுமாறித் தவித்தான். நிறைய செலவழித்து வெளிநாட்டில் வேலைக்குச் சேர்ந்ததால்
அவனிடம் அதிக சேமிப்புமில்லை. வேலையை விடலாமென்றால் இப்படி ஒரு வாய்ப்புக்கிடைப்பது கடினம். உள்ளூரிலும் உடனே வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. அவன் சுப்பையாவையும் கலந்தாலோசித்தான்.
அவர் யோசனைப்படி அவன் தன் தந்தையை ஒரு நல்ல முதியோரில்லத்மில் சேர்க்கலாமென்ற முடிவுக்கு வந்தேன்.
சுப்பை தனது தூரத்து உறவினரான முத்துக்கருப்பன் தெய்வயானை நடத்தும் சரணாலயம் பற்றிக் கூறினார்.
அவர்களிருவரும் முத்துக்கருப்பனை சந்தித்து அவன் தந்தை செல்லையாவை சரணாலயத்தில் சேர்த்தான். ஒரு சிறிய தொகையைக் கட்டி விட்டு மாதா மாதம் பணம் அனுப்புவதாகக் கூறிவிட்டு விடைபெற்றான். இதோ வருடங்கள் இரண்டு ஓடி விட்டன. செல்லையா நிம்மதியாகச் சரணாலயத்தைச் சரணடைந்தார். அங்கேயே உள்ள மருத்துவ வசதியைப் பயன் படுத்தி ஓரளவு தன் வேலையைத் தானே செய்து கொள்ளுமளவுக்கும் இன்னும் உடனிருப்பவர்க்கு தன்னாலான உதவிகளை செய்யும் வண்ணம் ஆரோக்கியம் பெற்றிருந்தார். மூத்த மகனும் மாதா மாதம் பணம் அனுப்பி அனுசரணையாக இருந்தான்.
No comments:
Post a Comment