தினமுனைப் போற்றி……
பல்லவி
தினமுனைப் போற்றி நான் பாட வரமருள்வாய்
தினகர குலத்தோனே ஶ்ரீராமா உனைத்துதித்தேன்
அனுபல்லவி
தனக்கிணை ஒருவருமில்லாத கேசவனே
கனக சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னவனே
சரணம்
பனங்காய் சுமக்க நினைக்கும் குருவி போல
உனைப்போற்றிப் பாட நானும் முயல்கிறேன்
அனங்கனையும் பிரமனையும் படைத்த ராகவனே
உனக்கே உயிரானேன் ராமா எனை நீ மறவாதே
No comments:
Post a Comment