சங்கரம் சிவ சங்கரம்…..
பல்லவி
சங்கரம் சிவ சங்கரம் பவ சாகரம் கடந்திடச்செய்யும் சிவம்
பொங்கரவமணிந்த சிவமனங்கனையெரித்த சாம்பசிவம்
அனுபல்லவி
மங்கை சங்கரியையணிந்தசிவம் எங்கும் நிறைந்த அன்பே சிவம்
கங்கையை சடையில் வைத்தசிவம் கேசவன் நேசனீசன் சிவம்
சரணம்
செங்கையில் மான்மழு ஏந்திய சிவம் அன்பர் தொழுதிடுமாதிசிவம்
திங்கள் பிறைதனை சூடிய சிவம் ஆனந்த தாண்டவமாடிய சிவம்
அங்கயற்கண்ணி மீனாக்ஷி அருகேயமர்ந்த அழகு சிவம்
எங்கும் நிறைந்த சதாசிவம் மங்களம் தந்திடும் பரமசிவம்
No comments:
Post a Comment