அவனைச் சரணடைந்தேன்…..
பல்லவி
அவனைச்சரண டைந்தேன் நிம்மதியடைந்தேன் ( மாதவனைச...)(யாதவனைச்)
உவகையுடன் நினைந்து மனமாரத் துதித்து
அனுபல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கண்ணனைக் கேசவனை
கவலை பிணியிடர் போக்கும் தாமோதரனை
சரணம்
சிவந்த இதழ்களும் செந்தாமரைக் கண்களும்
குவளை மலர் நிறம் கொண்ட அழகுத் திருமேனியும்
பவள வாயும் மதிவதனமும் திகழும்
அவனியோர் கொண்டாடும் நாராயணனென்னும்
No comments:
Post a Comment