இசை வடிவானவனே…….
பல்லவி
இசை வடிவானவனே நமச்சிவாயனே
திசையெங்கும் புகழ் விளங்குமுனையே துதித்தேன்
அனுபல்லவி
அசையும் பொருளும் அசையாப்பொருளும்
கேசவன் நேசனே அனைத்தும் நீயே
சரணம்
வசைபாடுவோர்க்குமருள ளிக்குமீசனே
விசையும் நீயே ஓசையும் நீயே
அசைந்தாடுமாடிய பாதனும் நீயே
மிசையோனுனைத்துதித்தேன் எனக்கருள்வாயே
No comments:
Post a Comment