நாடித் துதித்திடுவாய்……
பல்லவி
நாடித்துதித்திடுவாய் நமச்சிவாயன் பதமே
பாடியவன் புகழை மனமாரத்துதித்து
அனுபல்லவி
தேடிய கேசவனும் பிரமனும் காணாத
அடி முடி உடையவன் ஆடிய பாதன்
சரணம்
பாடுபட்டு சேர்த்து வைத்த பணமோ சொத்தோ மற்றும்
மாடு மனை மக்கள் சுற்றம் பதவி புகழ் எதுவுமே
கூட வாராதென்பதை அறிந்தே மனமே
காடுதனில் திரியுமந்த தோடுடைய பெருமானவனை
No comments:
Post a Comment