இன்றும் என்றும்….
பல்லவி
இன்றும் என்றும் நீயே துணை ஶ்ரீ ராமா
நன்றுன் நாமம் சொல்லி உனையே தினம் துதித்தேன்
அனுபல்லவி
கன்று பசுவையழைப்பது போலுனையழைத்தேன்
உன்றனருள் தந்து காத்தருள்வாய் கேசவனே
சரணம்
சென்றிலங்கை நகர்தனிலே அன்று சமர் செய்து
வென்றரக்கன் ராவணின் கதை முடித்த ரகுராமா
குன்றுதனையேந்திக் குவலயம் காத்தவனே
குன்றாப் புகழுடைய ஜானகி நாயகனே
No comments:
Post a Comment