ஒன்பதாம் தந்திரம்
சூக்கம பஞ்சாக்கரம்
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவம் என்னும் நாமத்தைச் சிந்தை உள் ஏற்றப்
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ.
"நமவென்று நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவவென்று நாமத்தைச் சிந்தையு ளேற்றப்
பவமது தீரும் பரிசும தற்றால்
அவமதி தீரும் அறும்பிறப் பன்றோ"
அவன் நாமத்தை….
பல்லவி
அவன் நாமத்தை சிந்தையுள் வைத்து
சிவயா என்று சொன்னாலும் போதும்
அனுபல்லவி
கவலை துன்பமிடரனைத்தும் தீரும்
பவப்பிணி நீங்கும் பரிசுத்தம் சேரும்
சரணம்
நமனையுமொடுக்கிய கேசவன் நேசனவன்
நம என்னும் நாமத்தை நாவில் வைத்து
நமச்சிவாய வென்று வாயார ஓதுவோர்க்கு
எம பயம் அவமதியனைத்தும் நீங்கும்
No comments:
Post a Comment