பல விதமாயுனை…..
பல்லவி
பல விதமாயுனைப் போற்றிப் பாடல்கள் புனைந்து விட்டேன்
நலமருள உனக்கின்னும் தயக்கமென்ன கேசவனே
அனுபல்லவி
உலகமெலாம் கொண்டாடும் ஶ்ரீமன் நாராயணனே
சலசயனப் பெருமாளே அருமா கடலமுதே
சரணம்
உலகுண்ட வாயனே உத்தமனே மாயவனே
அலகிலா விளையாடல் பல புரிந்த மாதவனே
மலைதனைக் குடையாக்கி ஆயர் குலம் காத்தவனே
நிலையிலா உலகில் நிலைத்திருக்கும் கண்ணனே
நிலம் நீர் நெருப்பு காற்று வெளியாகி நின்ற
உலகளந்த பெருமாளே சத்தியகிரிநாதனே
குலம் கல்வி செல்வம் தரும் மாலனே மதுசூதனனே
மலை மீது நின்று எனயாளும் வேங்கடவா
No comments:
Post a Comment