ஹம் காமாக்ஷி…..
பல்லவி
ஹம் காமாக்ஷி உனையே துதித்தேன்
நம்புமடியர்க்கு இன்பமளிப்பவளே
அனுபல்லவி
பெம்மான் சிவனின் இடமமர்ந்தவளே
கம்சனைக் காய்ந்த கேசவன் சோதரியே
சரணம்
இம்மாநிலம் போற்றும் காமேச்வரியே
உம்பர் முனிவர் தொழும் ஈச்வரியே - கனக
சிம்மாசனத்திலமர்ந்திருப்பவளே
வெம்பவக் கடல் கடக்க நீயே என் துணை
No comments:
Post a Comment