சரணடைந்தேன் தாயே…..
பல்லவி
சரணடைந்தேன் தாயே கௌதுகா தேவி
அரனயனரி பணியும் லலிதாம்பிகையே
அனுபல்லவி
பரதேவதையே கேசவன் சோதரி
அரக்கன் மகிடனை மாய்த்தவள் நீயே
சரணம்
வரம் தரும் கரமும் அபய கரமும் காட்டும்
மரகதமே மாயே திரிபுரசுந்தரி
அரவணிந்த பரமனின் இடப்பாகமமர்ந்தவளே
அரவணைத்தெனையே ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment