பத்மாவதியுனையே……
பல்லவி
பத்மாவதியுனையே நித்தியம் துதித்தேன்
சத்கதி பெறவேண்டி பத்ம பதம் பணிந்து
அனுபல்லவி
சத்தியகிரிநாதன் கேசவன் நாயகியே
உத்தமியே அலைமகளே உன்னத தத்துவமே
சரணம்
வித்தகர் போற்றும் வேதப்பொருளே
குத்தம் குறையேதுமில்லா கடலரசன் மகளே
சித்தத்திலுனையே வைத்திருக்குமெனக்கருள
மெத்தனமேன் தாயே ஶ்ரீமகாலக்ஷ்மியே
No comments:
Post a Comment