“ தாயுமானவன் “
தாயுமானவன் நீ தந்தையே
ஓயாது எனக்காக உழைத்தவன் நீ
நோயென்று நான் படுத்தால் காக்கும் மருத்துவன் நீ
ஆயிரம் இடர் வரினும் அயராதெனைக் காத்தவன் நீ
சேயெனைத் தோளில் சுமந்த நேயன் நீ
கோயிலில் விளங்கும் தெய்வத்துக்கும் மேலானவன் நீ
காயும் வயிற்றுடனே எனக்குணவு தந்த தேவன் நீ
தீயவையெனை அணுகாமல் காத்தவன் நீ
ஆயகலைகள் அனைத்தும் பெறச்செய்தவன் நீ
நேயமுடன் எனக்குதவிய தோழன் நீ
சாயத் தோள் கொடுத்துதவிய உறவும் நீ
பாயிரம் பல சொல்லி பரமனைத்துதிக்கும் வழி சொன்னவனும் நீ
ஆயினும் உனையன்றி வேறோர் தெய்வம் எனக்கில்லையினி🙏
No comments:
Post a Comment