Monday, 12 June 2023

நீலவண்ணனை…..

 



உலகத்தவர் எல்லாரும் இருக்கும் மிக பெரிய உலகையும், குளிர்ந்த பெரிய மலைகளும், கடலும், நிலவும்,சூரியனும் இவை எல்லாம் உண்டு எனக்கு பற்றவில்லை என நின்றவன் எம்பெருமான், கடல் சூழ்ந்த நீர் உலகுக்கு அரசர்களாக இருந்த சத்ரிய குலத்தை சீறி கொண்டு அழித்தவன் , முனிவர்களுக்கு அரசனான பரசுராமன். தனக்கு இணையாக அதாவது தனக்கு மேலே பிறர் இல்லை என்னும் எல்லையில் இருப்பவன் . நீர்வண்ணன் என்னும் பெயரை உடைய நெடுமால் அவனுக்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையே.

பெருமாளின் ஆறாவது அவதாரம் பரசுராமர். இவர் ஜமதக்னி முனிவருக்கும் ரேனுகாம்பாளுக்கும் பிறந்தவர். ஜமதக்னி முனிவர் அனைத்தையும் கேட்டவுடன் கொடுக்கும் காமதேனு பசு வைத்திருந்தார் . மகா பலசாலியான சத்திரியனான கார்த்த வீரியன் என்பவன் முனிவரிடமிருந்து பசுவை திருடிகொண்டான் . இதனால் பரசுராமர் அவனை கொன்றார். இதனால் கார்த்த வீரியனின் மகன்கள் முனிவரை கொன்றனர் . ரேணுகாம்பாள் கதறி அழ கோபமுற்ற பரசுராமர் 21 தலைமுறை சத்திரியர்களை அழித்தார்.


பார் ஆர் உலகும் பனி மால் வரையும் 
      கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு 
ஆராது என நின்றவன் எம் பெருமான் 
      அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப் 
பேரானை முனிந்த முனிக்கு அரையன் 
      பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் 
நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு 
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே 


                           நீலவண்ணனை…..


                                         பல்லவி

                     நீலவண்ணனை கண்ணனைக் கேசவனை

                     ஆலிலை மேல் துயின்றவனை மனமாரத்துதித்தேன்

                                     அனுபல்லவி

                     பாலன் பிரகலாதனுக்கருளிய மாலோலனை                      

                     ஞாலமே கொண்டாடும் ஶ்ரீரங்நாதனை

                                         சரணம்

                     பாருலகும் குளிர்ந்த பெருமலையும் கடலும்

                     சூரியனும் நீர் சூழ்ந்த உலகையுமாண்ட

                     பேரரசர் பலரைக் கொன்றழித்த முனியரசன்

                     நீர் வண்ணன் நின்ற நீர்மலை மேலுறையும்


No comments:

Post a Comment