Monday, 5 June 2023

சரணாலயம்


                                               சரணாலயம்
                                    
                                    அழகம்மையாச்சி - அத்தியாயம் 5

                                  அழகம்மையாச்சிக்கு இன்று 75 வது பிறந்த நாள்.  சரணாலயவாசிகள் அனைவரும் பொதுக்கூடத்தில் கூடியிருந்தனர். ஹால் நடுவே சிறு மேசையில் கேக் வைக்கப்பட்டிருந்தது. நடுவே ஒரு மெழுகுவர்த்தி செருகப் பட்டிருந்தது.  அருகே அழகம்மையும் செல்லாக்காவும் நின்றிருந்தனர். தெய்வானை முத்துக்கருப்பன் தம்பதிகள் வருகைக்காக காத்திருந்தனர். இதோ அவர்களும் வந்து விட்டனர். செல்லாக்கா மெழுகு வத்தியை ஏற்றினாள். அழகம்மையாச்சி அதை ஊதி அணைத்தாள். கூடியிருந்ததில் சிலர் ஹேப்பி பர்த் டே பாடினர்.  கரவொலியுடன் அனைவருக்கும் செல்லாக்கா வெட்டிய கேக் துண்டுகளை விநியோகித்தார். முத்துக்கருப்பன்  தம்பதியர் வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பினர். பின் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். அழகம்மையாச்சி இங்கு வந்து சேர்ந்து மூன்றாண்டுகள் ஓடி விட்டன. ஆச்சி வசதியான பெரிய நகரத்தார் குடும்பத்தில் பிறந்தவர். பத்தாவது வரை படித்தபின் அவள் தந்தை சிதம்பரம் செட்டியார் அவளுக்கு சுப்பிரமணியமென்ற செட்டிக்குலப் பையனுக்கு மணமுடித்து வைத்தார். வியாபாரத்திறமையால்  சுப்பிரமணியன் செட்டியாரவர்கள் தாய் நாட்டிலும், மலாயா நாட்டிலும் புகழ் பெற்றவராக விளங்கினார். மிகுந்த திறமையும், கெட்டிக்காரத் தனமும், கடின உழைப்பும், நேர்மையும், தர்ம சிந்தனையும், பரோபகாரக் குணமும், பாசமும் உள்ளவராக இருந்தார்.  சின்ன வயதிலேயே கடல் கடந்து மலாயா நாடு சென்று சிறப்பான முறையில் அங்குத் தொழில் புரிந்து நன்கு பொருளீட்டினார். அங்குத் தர்மங்கள் பலப்பல செய்து, மலாயா நாட்டில் கோவில் கட்டவும் பொருளுதவினார். மலாயா அரசாலுமவர்  பாராட்டப் பட்டார்.  அவர்    கம்பீரத் தோற்றமும்  சோர்வில்லாத உழைப்பாளியாகவும், தைரியத்திற்கும், விடா முயற்சிக்கும், எடுத்துக் காட்டாகவும் வாழ்ந்து தனது  72வது வயதில் மடிந்தார். 
தன்னுடை ஊரிலும் பல தான தர்மம் கோயில் திருப்பணி செய்திருந்தார். அவர் இறக்கும் போது அழகம்மைக்கு வயது 67 ஆகியிருந்தது. அதிகம் படிக்காவிட்டாலும் அழகம்மை சாதுர்யம் நிறைந்தவராக இருந்தார். கணவர் சொத்தை நிர்வகித்துப் பல தர்ம காரியங்கள் செய்து வந்தார். சொந்த ஊரில் அவர்களிருந்த வீட்டை அனாதை இல்லத்துக் கொடுத்துவிட்டார். பின் சென்னையில் ஒரு சிறு வாடகை வீடெடுத்துத் தங்கினார். அந்த நேரம்தான் அவருக்கு அவர் தம்பி உருவத்தில் போதாத காலம் துவங்கியது.  தனியாகத்தானே வசதியாக இருக்கிறோமே என்றெண்ணி, வியாபாரத்தில் நஷ்டமடைந்து பொருளனைத்தையுமிழந்த தன் தம்பி பழனியையும் அவர் மனவி பார்வாதியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
 பழனி மீண்டும் புதியதாக வியாபரம் தொடங்க வேண்டுமெனப் பல முறை நச்சரித்தான்.  அழகம்மை முதலில் மறுத்தாலும் பிறகு சரியென்று ஒப்புக்கொண்டு பொருளுதவி செய்தாள். பழனி சுலபமாகப் பணம் கிடைத்ததால் சரியானபடி வியாபாரம் துவங்காமல் கிடைத்த பணத்தையெல்லாம் சூதாடித் தொலைத்தான். அழகம்மை இது எதையும் அறியவில்லை. மேலும் அவள் சென்னையிலுள்ள அனாதை இல்லத்துக்கு மாதா மாதம் பொருளுதவி செய்து வந்தாள். அந்தப் பணத்தை அவள் தம்பி மூலம் அனுப்பத் தொடங்கினாள். அவனோ முதலிலெல்லாம் குடுத்த தொகையில் பாதி தானெடுத்துக் கொண்டு மீதியை இல்லத்துக்கு கொடுத்து வந்தான். அந்த இல்லத் தலைவி ஏன் முன்பு கொடுத்ததை விட மிகவும் குறைவாகத் தருகிறாளென்று கேட்டதற்கு ஏதோ பொய் சொல்லி சமாளித்து வந்தான். பின் சில மாதங்களுக்குப்பிறகு மொத்த பணத்தையும் தானே சூதாட வைத்துக கொண்டு அந்த இல்லத்தலைவியிடம் அக்காவுக்கு வருமானம் குறைந்து விட்டது அதனாலினி தர இயலாது என்று பொய்யுரைத்துவிட்டான்.  இப்படி சில மாதங்கள் ஓடிவிட்டது.  இதன் நடுவில் அவன் தம்பி பார்வதியும் முன் போல் அனுசரணையாக சமையல் மற்றும் வீட்டு வேலைகளை  சரியாகச் செய்யாமல் விட்டேத்தியாக நடக்கத் தொடங்கினாள். கணவனை புது ப்புடவை வேண்டும் நகை வேண்டுமென நச்சரிக்கத் துவங்கினாள்.  பழனி அக்காளிடம்  குறை பட்டுக்கொண்ட போது அழகம்மை தன் புடவை நகைளில் சிலவற்றை அன்போடு தம்பி மனைவிக்குக் கொடுத்தாள்.  ஆனால் ஆசைக்கு அணையேது பார்வதி பேராசைப்பட ஆரம்பித்தாள்.  இதற்குள் இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. அழகம்மைக்கும் சர்க்கரை நோய்,  ரத்த அழுத்தமென உடலுபாதைகள் தொடங்கிவிட்டது.  அதிக நேரம் வேலையேதும் செய்ய இயலாதவளாகிவிட்டாள்.
தம்பியின் நடத்தை சரியில்லை மோசமாகி வருகிறது என்பதை அறிந்து வைத்திருந்தாள். ஏனெனில் அந்த அனாதை இல்லப்பெண்மணி சில மாதம் பொறுத்துப் பணம் வரவில்லையென்று பார்த்து அழகம்மையை நேரில் சந்தித்துக் கூறிவிட்டாள்.  அதனாலழகம்மை மிகவும் மனமுடைந்தாள். அந்த இல்லத்துக்கு தருமளவுக்கான தொகையை வங்கியில் வைப்பு நிதியிலிட்டு மாதா மாதம் பணம் போய்ச்சேருமாறு ஏற்படு செய்துவிட்டாள். தம்பி, தம்பி மனைவி நடவடிக்கைகள் சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். அவர்களிருவரும் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்வதை நினைத்து மிகவும் மன வேதனைப்பட்டாள்.  இனி தம்பி சரியாக மாட்டான் என்றுணர்ந்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கத் துவங்கினாள்.  சரணாலயம் நடத்தும் தெய்வானை அழகம்மைக்கு தூரத்து சொந்தம். முத்துக்கருப்பன் தம்பதியர் நடத்தும் சரணாலயம் பற்றியுமவள் அறிவாள். அவர்களுக்கு முன்பு அவள் சரணாலயத்திற்கென உதவி நிதி அளித்திருந்தாள். இப்போதவள் அவள் ஒரு நாள் அவர்களை சந்தித்து தன் நிலையை விவரித்து தானுமவர்கள் முதியோரில்லத்தில் சேர விரும்புவதாகவும், அங்குள்ளவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு அங்கேயே தங்க முடிவு செய்ததாக க்கூறி அவர்கள் அனுமதியும் பெற்றாள்.  தன்னுடை வங்கியிலிருந்த வைப்புநிதியிலிருந்து கொஞ்சம் ரொக்கத்தை சரணாலயத்துக்கு நன்கொடையாக அளித்தாள். தம்பியையும் தம்பி மனைவியையுமழைத்துத் தானந்த முதியோரில்லத்தில் சேரப்போவதாகவும் இனி அவர்களிஷ்டப்படி வாழலாம் என்று சொல்லி விட்டுத் தன்னுடைகளை ஒரு சூட் கேசில் எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள். தம்பியும் அவன் மனைவியும் அழுது காலில் விழுந்தும் அவள் முடிவை மாற்றப்போவதில்லை என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.
இதோ அழகம்மையாச்சி சரணாலயம் முதியோரில்லம் வந்து சேர்ந்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டது. தன் நலனையும் கவனித்துக் கொண்டு அங்கிருப்பவர்களுக்கும் தன்னால் முடிந்த அளவு உடலாலும் பணத்தாலும் உதவிக்கொண்டு நிம்மதியாகக்காலத்தைக்கழிக்கிறாள்.
      
      

No comments:

Post a Comment