ஜெய ஜெய ஜெய…….
பல்லவி
ஜெய ஜெய ஜெய ஶ்ரீ பத்மநாபா
உயரிய உந்தன் திருவடி பணிந்தேன்
துரிதம்
அயனரனமரர் சுகசனகாதியர்
புயங்கனனைவரும் வணங்கிப் போற்றும்
அனுபல்லவி
துயரிடர் களைந்திடும் மாதவா கேசவா
கயல்விழியாள் திருமகளை மார்பில் வைத்திருப்பவனே
சரணம்
சயன கோலம் கொண்டு அனந்தன் மேல் துயில்பவனே
பாயசான்னந்தனை விரும்பி ஏற்பவனே
வியக்கும் வண்ணம் பெரும் பொருளுடையவனே
தயக்கமின்றி எனை ஆண்டருள வேண்டினேன்
No comments:
Post a Comment