பல பெயர் சொல்லி……
பல்லவி
பல பெயர் சொல்லி உனையழைத்தேன் கேசவா
நலமருள்வாயென திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
அலகிலா விளையாடல் புரிந்திடும் மாதவா
உலகுண்ட வாயனே உத்தமனே ஶ்ரீதரா
சரணம்
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனே
சிலையாக நின்றிருக்கும் குருவாயுரப்பா
அலைகடல் நடுவே உறங்கும் நாராயணா
அலைக்கழிக்காமலெனை ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment