கிளியேந்தும் கரத்தாளை…..
பல்லவி
கிளியேந்தும் கரத்தாளை ஒளி தரும் முகத்தாளை
விளித்திடுமடியார்க்கருளும் கயற்கண்ணியை
அனுபல்லவி
நளினம் நிறைந்தவளைக் கேசவன் சோதரியை
பளிங்கென மின்னுமழகுடைய ஈச்வரியை
சரணம்
வளி வெளி நிலம் நீர் நெருப்பென ஐந்தாகித்
தெளிவான தேவியாய்க் காட்சி தருபவளை
களி நடம் புரியும் ஆலவாயழகன் நாயகியை
எளியோர்க்கருளும் மீனாக்ஷியைத் துதித்தேன்
No comments:
Post a Comment