இறைவனைத் துதிப்பதே…..
பல்லவி
இறைவனைத் துதிப்பதே ஆனந்தமென்னெஞ்சே
கறைபிறவிப் பிணி தீர கருமவினைப் பயனகல
அனுபல்லவி
மறைந்து திரையின் பின் நின்றாலுமவனை
இரைந்து வாயாரப் பாடிக் கொண்டாடி
சரணம்
சிறையுடல் தளர்ந்து மெய்யது நடுங்க
நரை திரை மூப்பு நாமடையும் முன்னமே
பிறை நுதலோனீசன் சிவபெருமானையோ
மறை போற்றும் மாதவன் மாயன் கேசவனையோ
No comments:
Post a Comment