பொன்னம்பலவாணனே……
பல்லவி
பொன்னம்பலவாணனே உன்னைத் துதித்தேன்
உன்னம்பலம் வந்து உனதருள் வேண்டி
துரிதம்
மன்னர்கள் நரர் சுரரிந்திரன் நான்முகன்
உன்னருள் பெறவே கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
என்னப்பனல்லவா என்னய்யனல்லவா
சென்ன கேசவன் நேசனே ஈசனே
சரணம்
முன்னமொரு கிழவிக்காய் மண்சுமந்தாயல்லவா
இன்னம் ஓடேந்தி பிச்சை எடுக்கவில்லையா
பன்னகாபரணனே விளையாடல் பல புரிந்தவனே
என்னை ஆண்டருள இதுவே தருணம்
No comments:
Post a Comment