இனியென்ன சொல்லி…….
பல்லவி
இனியென்ன சொல்லி உனைப் பாடக் கேசவனே
தனிப்பெருங்கடவுளே ஶ்ரீமன் நாராயணனே
துரிதம்
மனிதரும் முனிவரும் தேவருமிந்திரனும்
சனியுடன் கோள்களும் வணங்கிடும் தேவனே
அனுபல்லவி
கனியே கன்னலே தேனே மரகதமே
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயுமுடையவனே
சரணம்
இனியவனே இன்னா செய்த அரக்கருக்குமருள்வோனே
பனிமலை நாதனும் பிரமனுமிந்திரனும்
வனிதையர் கோபியரும் கோபர்களும் போற்றும்
புனிதனே மாயக் கண்ணனே கோபாலனே
No comments:
Post a Comment