சரணாகத வத்சலனை…..
பல்லவி
சரணாகத வத்சலனைக் கேசவனைப் பணிந்தேன்
அரணாக இருந்து நமைக்காக்குமரங்கனை
துரிதம்
நரர் சுரர் நாரதர் சுரபதி ரதிபதி
சுகசனகாதியரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
கரன் முரனை வதைத்த காகுத்தன் ராமனை
அரனயனும் பணியும் ஶ்ரீ பரந்தாமனை
சரணம்
இரணியனைக் கொன்றழித்த நரசிம்ம மூர்த்தியை
புரவியரக்கன் கேசியின் வாயைப் பிளந்தவனை
பரசுபாணியின் கர்வம் தீர்த்தவனை
நரஹரியை ஶ்ரீமன் நாராயணனை
*பராசர பட்டர்* என்பவர் ஒரு முறை காட்டுபாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.
நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச் சென்ற சீடர்கள், அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.
அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர்.
பட்டர் எழுந்தவுடன், “*காட்டில் என்ன ஆயிற்று?* என்று வினவினார்கள்
நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர்.
என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள்.
ஒரு வேடன் ஒரு முயல் குட்டியை பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக் கட்டி எடுத்துச் சென்றான்.
இதைக் கண்ட அந்த முயல் குட்டியின் தாய் முயல், அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக் கொண்டு மன்றாடியது.
தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன், முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான்.
*இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்து விட்டேன்* என்றார் பட்டர்.
*இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது?* என்று கேட்டார்கள்.
*சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா?*
*இல்லை சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்களா? * அதற்கும் வாய்ப்பில்லை.
ஆனாலும், அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து,
சரணாகதி என்றால் என்ன வென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படி கருணைக் காட்டுகிறான் என்றால்,
*சரணாகத வத்சலனான பெருமாள், அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்?*
*இறைவன் நம்மை கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி, இன்னும் என் மனத்தில் உதிக்க வில்லையே என ஏங்கினேன். அதனால் தான் மயங்கிவிழுந்து விட்டேன் என்று விடை அளித்தார் பட்டர்.*
No comments:
Post a Comment