ராஜகாளியம்மன்
பல்லவி
அழகிய ராஜகாளியம்மனை
பழகுதமிழில் பாடித்துதித்தேன்
அனுபல்லவி
அழலினையேந்தும் நெற்றிக் கண்ணனின்
இடம் கொண்டவளைக் கேசவன் சோதரியை
சரணம்
பிழைபல புரிந்தேன் சிறுவயதினிலே
உழன்று வீணாய் உலகில் திரிந்தேன்
மழலையென் பிழைபொறுத்து ஆண்டருள வேண்டுமென
கழலடி தொழுது நாமமே போற்றி
No comments:
Post a Comment