நாராயணீயம் லீலை 43 (திரினாவர்த்தன்)
பல்லவி
கண்ணா உன்னையே நாளும் தொழுதேன்
பண்ணிசைத்துந்தன் லீலைகள் சொன்னேன்
அனுபல்லவி
எண்ணங்களாலொரு பாலம் சமைத்து
கேசவனுனது திருவடி சேரவே
சரணம்
உன்னெடை தாங்காத அன்னை யசோதை
தன்னிடை விட்டுனை தரணியில் கிடத்தி
புன்னகை தவழும் கண்ணனே கேசவா
தன் பணிதொடரவே வேலையில் மூழ்கினாள்
சூறாவளியாய் சூழ்ந்து அரக்கன்
திரினாவர்த்தன் கைதூக்கிவிடுமுனயே
வீராவேசமாய்த்தூக்கியெடுத்தான்
பாரம் தாங்காது நேராக வீழ்ந்தான்
மண்ணும்
புழுதியும் சுழ்ந்ததனாலே
புண்ணிய
கோகுலம் இருளடைந்திடவே
கண்கலங்கி
கதறி யசோதையழைத்திட
நந்தகோபனும் அனைவரும் வந்தனர்
ஓரமாய்ப்பாறையில் கிடந்த அரக்கன்
மார்மீது
பங்கயப் பதம் வைத்து நடந்திடும்
கண்ணனை விலையிலா
நீலமணியென
அள்ளியெடுத்து அனைவரும் மகிழ்ந்தனர்
No comments:
Post a Comment