Thursday, 6 March 2014

விக்னேச்வரன்



விக்னேச்வரன்

பல்லவி

தாமரைப்பாதனை விக்னேச்வரனை
தூமலர் தூவி மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

பாமரர் பண்டிதர் தேவர்கள் முனிவர்கள்
மாமறையோதிடும் வேதியர் போற்றும்

சரணம்

காமனை விடவும் அழகுடையவனை
தாமரை மலர்நாபன் கேசவன் மருகனை
ஓமெனும் மந்திரப் பொருளானவனை
பூமண்டலத்தோர் புகழ்ந்தேத்தும் கரிமுகனை




No comments:

Post a Comment