பத்ம கணபதி
பல்லவி
அரவிந்த மலர் மீது
நின்றருளும் கணபதியை
சிரம் தாழ்த்திக்
கரம் பணிந்து மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
கரமைந்துடையவனை
கேசவன் மருகனை
அறம்
பொருளிம்பமனைத்துமளிப்பவனை
சரணம்
அரவினை இடுப்பிலும்
மார்பில் பூணூலும்
பூரணம் பொதிந்த
மோதகம் கரத்திலும்
திரிசூலமங்குசம்
சங்கும் வைத்திருப்பவனை
நரர்சுரர் நான்முகன்
வணங்கிடும் கரிமுகனை
No comments:
Post a Comment