Sunday, 2 March 2014

ஸ்ரீ மகாகணபதி



ஸ்ரீ மகாகணபதி

பல்லவி

மறைபொருள் நீயே மகாகணபதி
கறைபிறவிப்பிணி நீங்க உனையே துதித்தேன்

அனுபல்லவி

குறையொன்றுமில்லாத கேசவன் மருகனே
பிறையணிந்த சிவன் மகனே ஆனைமுகத்தோனே

சரணம்

வரையறையில்லாத வாரணமுகனே
குறைதீர்த்து அடியார்க்கு நலமளிக்கும் ஐங்கரனே
சிறையுடல் களைந்திட உனதருள் வேண்டினேன்
விரைந்தெனக்கருள்வாய் வேழமுகத்தோனே







No comments:

Post a Comment