Saturday, 1 March 2014

குரு பவனபுரக்கண்னன்


                        குரு பவனபுரக்கண்ணன்

                       பல்லவி

              கனி காண வேண்டும் குருவாயுரப்பா

              இனியென்றுமுந்தன் திருப்பாதம் பணிந்து

                         அனுபல்லவி

              முனிபுங்கவோரும் மனிதரும் போற்றும்

               புனிதனே கேசவா பவனபுரத்தரசே

                           சரணம்

               கருணைக்கடலே கருமுகில் வண்ணனே

               திருநாளில் விஷுக்கனியாய் எனக்கருளும் கண்ணா

               அருமறைகள் புகழ்ந்தேத்தும் அச்சுதா மாதவா

                திருத்தங்கும் மணிமார்பா தீனசரண்யனே
















No comments:

Post a Comment