மாயச்சகடம்
பல்லவி
மாயச்சகடம் உதைத்த
மாயனை
ஆயர்குலத்துதித்த
பாலனைப் பணிந்தேன்
அனுபல்லவி
நேயமுடன் சீராட்ட
ஊராரையழைத்து
சேயவனைத்தொட்டிலிட்டாள்
அன்னை யசோதை
சரணம்
அரக்கன் கம்சனின்
ஆணைக்கிணங்கியே
இரண்யாக்ஷன் மகன்
சகடாசுரனும்
சிறு
குழந்தைக்கண்ணனை அழித்திட வேண்டுமென
கருதிச் சகட
வடிவினில் வந்தான்
மரவண்டியையுடைத்துப்
பொடிபொடியாய்ச்செய்து
அரக்கனை மாய்த்து
மாதவனும் சிரித்தான்
உரத்த ஒலிகேட்டு
ஓடிவந்த அனைவரும்
சிரித்திருக்கும்
கேசவனைக் கண்டு மகிழ்ந்திட
No comments:
Post a Comment