Sunday, 30 March 2014

சேகரன் மகன்


சேகரன் மகன் 

பல்லவி 

ஸ்ரீ கணபதி யுனை மனமாரத்துதித்தேன் 

நீ கதியெனவே மலர்ப்பதம் பணிந்தேன்  


அனுபல்லவி 

நாகத்தணையான்  கேசவன் மருகனே 

யோகியர் ஞானியர் புத்தியிலுரைபவனே 

சரணம் 

சாகசங்கள் பல புரிந்தவனே கரிமுகனே 

சேகரன் மகனே நாகாபரணனே 

மேகக்கருநிற மேனியனே சுமுகனே 

வேகமே வந்தெனை யாண்டருள வேண்டுமென 

















No comments:

Post a Comment