தன்னிகரில்லாத கணபதி
பல்லவி
தன்னிகரில்லாத உன்னையே துதித்தேன்
சின்னஞ்சிறுவடிவில் காட்சிதரும் கணபதியே
அனுபல்லவி
மன்னுயிர்காக்கும் கேசவன் மருகனே
இன்னலிடர் களையும் வேழமுகத்தோனே
சரணம்
தன்னலமில்லாது பிறர் நலம் பேணும்
நன்னெறியறிவும் இன்னிசை ஞானமும்
உன்னருளாலே யான் பெற வேண்டியே
முன்னறி தெய்வமுன் திருவடி பணிந்து
Ganesha made in a single chana dal
world's smallest Ganesha
world's smallest Ganesha

No comments:
Post a Comment