Friday, 21 March 2014

ஆடும் கணபதி




ஆடும் கணபதி
பல்லவி 
ஆடும் கணபதியின் அழகினைக்காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ  நன்னெஞ்சே
அனுபல்லவி
நாடிடுமன்பர்கள்  குறைகளைத் தீர்க்க
ஓடோடி வந்திடும்  கேசவன்  மருகனின்
சரணம்
கோடானுகோடி தவம் செய்யும் முனிவரும்
தேவரும் கணங்களும்  நந்தியும் பிரமனும்
தேடித் துதித்திடும் தேவாதிதேவனின்
ஈடிணை இல்லாத ஆனைமுகத்தோனின்  



No comments:

Post a Comment