Saturday, 8 March 2014

ராதாகிருஷ்ணன்



ராதாகிருஷ்ணன்

பல்லவி

கண்ணனும் ராதையுமாய் நின்று காட்சி தரும்
வண்ணமிகு மாதவனை மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

விண்ணோரும் மண்ணோரும் வியந்து போற்றும்
புண்ணியனை வெண்ணிலவை கண்கவர் ஜோடியினை

சரணம்

வெண்சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தும்
கண்மணியைக் கேசவனை ஆயர் குலக்கொழுந்தை
பெண்ணணங்கின் பேரழகின் மனங்கவர் நாயகனை
மண்ணையுண்ட வாயனை கோபியரின் நேயனை




No comments:

Post a Comment