நாமகரணம்
(Narayaneeyam Dasakam - 44 - Garga Muni Names
the Child as Krishna)
பல்லவி
திருநாமமாயிரமுடைய உந்தனுக்கு
ஒரு நாமம் சூட்ட கர்கமுனி வந்தார்
அனுபல்லவி
பெருமகிழ்ச்சியுடனே நந்தகோபனும்
வரவேற்று உபசரித்து ஆசனமும் தந்தார்
சரணம்
கம்சனுக்கு பயந்து வந்த விவரத்தைக்கூறி
தம் பணியை கர்கமுனி உடனே தொடங்கி
பலமுடைய மூத்தவனை அழகு நிறைந்தவனை
பலராமனென்றே பெயரிட்டழைத்தார்
திருநாமம் பலவுடைய பகவானே உனக்கு
ஒரு நாமம் வைக்க யோசித்த குருமுனிவர்
வாசுதேவனென்றும் ஸ்ரீ க்ருஷ்ணனென்றும்
இரு நாமம் சொல்லி விளக்கமுமளித்தார்
ஸ்ரீக்ருஷ்ணனென்றால் பாவங்கள் துயரங்கள்
மாயைகள் விலகுமென்றும் நன்மைகள் சேருமென்றும்
திருமால்நீ யென்றறிந்தும் கூறாமல் சென்றார்
நந்தர்கள் சந்தோஷ வெள்ளதில் மூழ்கினர்.
No comments:
Post a Comment