கோவிந்த பாதம்
பல்லவி
இணையடி நிழலே துணை யெனக்கு
அணையா விளக்கே கோவிந்தா உனது
அனுபல்லவி
அணைத்தெனையாண்டருள வேண்டுமென உனையே
வணங்கித்துதித்தேன் ஆதி கேசவா
சரணம்
தணியாத ஆசைகளால் மனம்போனபோக்கில்
பிணிதரும் தவறான வழிகளில் திரிந்தேன்
அணியும் அணிக்கழகே உனதருளால் மனதிருந்தி
பணிந்தேனுனதிரு அரவிந்த பதமே
No comments:
Post a Comment