கண்ணன் லீலைகள்
பல்லவி
கண்ணனின் லீலைகளைச்
சொன்னாலும் கேட்டாலும்
எந்நாளும் எவர் மனமுமானந்தமடைந்திடும்
அனுபல்லவி
பண்டொரு நாள் முலையுண்ட
கண்ணன் வாய் திறந்திட
அண்டசராரங்களனைத்துமதில் கண்டாள்
சரணம்
அண்டையசலாயர்குல பாலருடன்
களிக்கையில்
கண்ணனைவரையும் ஏமாற்றிக்
காய் கனிகள்
அத்தனையும் தானே உண்டதனால்
கோபமுற்ற
நண்பர்கள் அவன்
மண்ணையுண்டானெனக்கூற
அன்னை பதைபதைத்து வாய்
திறக்கச்சொன்னாள்
முன்னொரு நாள்
பிரளயத்தில் பூமியையும் கடலையும்
உண்டவனே இன்று நீ வாய்
புதைத்து நின்றாய்
கோபமுற்றுக் கவலையுடன்
தாய் மீண்டும் கேட்க
வெண்ணையுண்ட கேசவன் நீ
வாய் திறந்து காட்ட
அண்ட பகிரண்டமும் காடு
மலை மேடுகளும்
வைகுண்டம் நீயுறங்கும் பாற்கடலுமின்னும்
ஈரேழு உலகமும் அதனுள்ளே
மற்றுமொரு
கண்ணன் வாய் திறந்தபடி
நின்றிருக்கக் கண்டு
கண்ணிமைக்காமலே அன்னை
யசோதை
தன்னிலை மறந்திருக்க மாயக்கண்ணன்
இன்னும் பால் வேண்டுமென
மடிமீது கிடந்தான்
No comments:
Post a Comment