மணித்வீப கணபதி
பல்லவி
மணித்வீப கணபதியை மனமாரத்துதித்தேன்
வணிகம் வளர்ந்து வரும் நெய்வேலித்தலத்திலங்கும்
அனுபல்லவி
அணிமாசித்திகளும் தேவரும் முனிவரும்
தணிகாசலனும் கரம்பணிந்தேத்தும்
சரணம்
மணித்துளிகளாதவன் மாசி மாதத்தில்
கணபதியின் கழலடியை கிரணங்களாலே
பணிந்து ஒளிவீசி அழகுறச்செய்திடும்
இனிய காட்சியை பக்தருக்களித்திடும்
நெய்வேலி நகரம், ஸத்சங்கம் - மணித்வீபம், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம் - சூரிய பூஜை - வருடத்தில்
மாசி மாதத்தில் சில நாட்கள் மட்டுமே காணக்கிடைக்கும் ஒரு அற்புத நிகழ்வு. சூரியன்
மாலை நேரத்தில், தனது ஒளி மிகு கரணத்தினால் விநாயகரைப் பணிந்து
விடைபெறுகின்றான். சூரிய ஒளியின் தங்க நிறத்தினால் விநாயகர் தகதகக்கின்றார்.
வருடத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே நடக்கும் அரிய நிகழ்வு.
No comments:
Post a Comment