விக்ன விநாயகன்
பல்லவி
பாதமே துணை பரிந்தருள் புரிவாய்
வேதனை வினைதீர்க்கும் கணபதியே உனது
அனுபல்லவி
வேத சாஸ்த்திர புராணங்கள் போற்றும்
ஆதிதேவனே ஆனைமுகத்தோனே
சரணம்
பூதகணங்களும் நந்தியும் துதித்திடும்
நாதவடிவானவனே கேசவன் மருகனே
மாதரார் சித்தியும் புத்தியும் மணந்த
மோதகக்கையனே விக்னவினாயகனே
No comments:
Post a Comment