மணக்குள வினாயகன்
பல்லவி
தும்பிமுகப்பெருமானை
நம்பித்துதித்தேன்
அம்புலி பிறையணிந்த
மணக்குள கணபதியை
அனுபல்லவி
அம்புய நாபன் கேசவன்
மருகனை
அம்பிகை உமை கொஞ்சும்
கௌரிசுதனை
சரணம்
தம்பி முருகன் வள்ளியை
மணம் புரிய
அன்புடன் உதவிய
ஆனைமுகத்தோனை
கொம்பொன்றுடையானை மறைபுகழ்
கரிமுகனை
வெம்பவக்கடலினைக் கடந்திட
வேண்டியே
No comments:
Post a Comment