Friday, 28 March 2014

எசப்பாட்டு



கண்ணீர் காதல் கண்ணீர் 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஆச களி எடுத்து 
பாச நீர் தெளிச்சி ...
பிசஞ்சி இசவாக்கி....
பக்குவமா பதமாக்கி....
ஓங் கையும்
ஏங் கையும்
ஓர் கையா நாமாக்கி ....
செஞ்சு வச்ச ..
காதல் பானை ...
நெஞ்சு வெடிச்சி ...
செத்து போச்சி .....

கரிச காட்டுக்குள
கள்ளிச்செடி ஓரத்துல ...
கேப்ப களி திங்கையில...
நெஞ்சு குழி தின்னவளே ...
கண்ணால நாம் போட்ட ...
காதல் பல்லாங்குழி ஆட்டமெல்லாம் ....
பருத்தி பஞ்சா
பறந்து ....
பரலோகம்
போயிடிச்சி .....

பொங்கலுக்கு பான வச்சி
பொங்க சோறு பொங்க வச்சி
கரும்பு நீ கடிக்கையில ...
கட்டெறும்பா ஓன் எலும்புக்குள்ள ...
குறும்பா
நா புகுந்து ....
காதல் கொழம்பு வச்சி ...
கை நனச்ச ...
கரையாத .........
காலமெல்லாம் ...
கண்ணீரா
கரைஞ்சி போச்சி

நெலவுக்கே தெரியாம
நெலவ செற புடிச்சி ...
வளவுக்குள் நாம .
வசமா கட்டிவச்சி
இரவெல்லாம் வெதச்ச ..
கல்யாண கனவு வெத
கால் மொளச்சி
சொல்லாம
நெலவோட
ஓடி போச்சி

அய்யனார் சாமிக்கு ...
அருவா படைக்கையில ...
கொடுவா பார்வையாள
கொக்கி போட்டவளே ...
சிறுக்கி ஓன் கிறுக்கில் ....
சரிஞ்ச எங் காதல் குடல் ...
ஒனை உறிஞ்சி
நிமிர முன்ன
செரிக்காம
செத்துருச்சி ....

பக்குவமா பதுக்கி வச்ச
ரெண்டு பொஸ்தகத்து மயிலிறகா
உசுருக்குள
பொதச்சி வச்ச
ஓன் பெயரும்
என் பெயரும்
பருவத்து காத்தடிக்க
பொஸ்தகத்த
மறந்து போச்சி ...
றெக்க கட்டி வெவ்வேறா
எங்கோயோ ...
பறந்து
தொலஞ்சி
போச்சி ......

இப்படிக்கு -கீதமன்

எசப்பாட்டு 

ஒம்பாட்டுக்கெசப்பாட்டு 

நாம்பாடப்போகையிலே 

எம்பாடு சங்கடமா 

ரொம்ப சங்கடமா 

போச்சுதெய்ய  என்ன சொல்ல 

நெக்குருகி  காதல் கதெ 

நான் கேட்டு பட்டுக்கிட்டேன் 

இனிமே என்கதையை 

என்னான்னு நாஞ்சொல்வேன் 
 
காதலுக்கு கண்ணில்லெ 

கண்ணீரு மட்டுந்தேன் 

பூமிக்கே தெரியுமப்பு  

அந்த 

சாமிக்கும்  தெரியுமப்பு 

இப்படிக்கு 'அக்ரிஷ்'












No comments:

Post a Comment