மகாவிஷ்ணு
பல்லவி
அவதாரமீரைந்து அவனியிலெடுத்தவனை
மகாவிஷ்ணுவை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தவயோகியரும் சுகசனகாதியரும்
அமரருமிந்திரனும் பிரமனும் பணிந்தேத்தும்
சரணம்
மூவுலகும் காத்து தருமநெறி தழைத்திட
மீனாயாமையாய் பன்றியாய் சிம்மமாய்
வாமனனாய்ப் பரசுராம ராமனாய்
ஸ்ரீ க்ருஷ்ணபலராம கல்கியாய்
No comments:
Post a Comment