சதி சாவித்திரி
பல்லவி
காதலால் சாதலை வென்றவள் கதையை
சாதனையைப்பாடி மனம் களித்தேன்
அனுபல்லவி
பூதலம் போற்றும் சாவித்திரியை
ஏதமிலாளைக் கேசவன் பணிந்து
சரணம்
மேதினி புகழ்ந்திடுமரசன் தனக்கொரு
வாரிசு வேண்டி தேவியைத்துதித்தான்
வேதனை நீக்கி சாவித்திரி தேவி
அருள் புரிந்தொரு பெண் மகவளித்தாள்
சாவித்திரியென்றே நாமம் சூட்டி
ஆவலுடனவனும் அவளை வளர்த்தான்
பருவம் வந்ததும் தானே தனக்கு
நாயகனொருவனைத் தேடிச் சென்றாள்
மகளொரு அன்னக்காவடியான
அரசகுமாரனைக் காட்டில் கண்டு
விரும்பியதறிந்து முதலில்
வெகுண்டான்
இறுதியில் மகளின் திருமணம்
முடித்தான்
திருமணமாகி ஒரு வருட முடிவில்
கணவனிறப்பது உறுதியென்றறிந்தும்
சாவித்திரிதன் கணவனுடன் கூட
சத்தியவான் கரம் பற்றிக் கானகம்
சென்றாள்
காலம் விரைவில் கடந்தது காலனும்
வரும் நாளுமருகில் வந்தது அன்று
சாவித்திரியும் சத்தியவானுடனே
உதவிடவென்று கூறிச்சென்றாள்
மதிய வேளையில்
சத்தியவானயர்ச்சியில்
சாவித்திரி மடிமீது
தலைவைத்துப்படுத்தான்
எதிரில் நின்ற காலனை கண்டு
மங்கை பயமின்றி
ஏறிட்டுப்பார்த்தாள்
ஆயுள் முடிந்தவவனெனக்கூறி
உயிரைக்கவர்ந்து சென்ற காலனை
சாவித்திரியும் விடாமல்
தொடர்ந்தாள்
கெஞ்சிக் கூத்தாடி வாதம்
புரிந்தாள்
என்னசொல்லியும் கேட்காதவளின்
விடாமுயற்சியை மெச்சி யமனும்
இருவரம் தந்தேன் கேளெனச்சொன்னான்
அவளும் நன்கு யோசித்து உடனே
ஒருவரம் கணவனின் பெற்றோர் நலம் பெறவும்
மற்றொன்று மக்கள் நூறு தனக்கு
வேண்டுமென்றும்
கேட்டதை நமனும் தந்தேனென்று சொல்ல
சத்தியவானுயிர் மீட்டு சதியவள் மகிழ்ந்தாள்
No comments:
Post a Comment