அபிராமி அந்தாதி:
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்து ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே! எண்ணில் ஒன்றுகில்லா
வெளியே! வெளி முதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே!
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்து ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே! எண்ணில் ஒன்றுகில்லா
வெளியே! வெளி முதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே!
அபிராமவல்லி
பல்லவி
ஒளிக்கு ஒளி தரும்
தாயே நீயே
எளியேனெனையே
காத்தருள்வாயே
அனுபல்லவி
விளிக்குமடியார்
மனதினிலிருக்கும்
ஒளியே ஒளியின் சுடரே
கிளியே
சரணம்
பளிங்கு மேனியும்
பவளவாயும் கொண்ட
நளினகாந்தியே கேசவன்
சோதரி
களிநடம்
புரிந்திடும் ஈசன் பங்கிலுறை
அளியே மலைமகளே
அபிராமவல்லியே
No comments:
Post a Comment