Friday, 7 March 2014

மதுசூதனன்




மதுசூதனன்


பல்லவி



முகதரிசனமே போதும் கண்ணா 
அகம் குளிர வைக்கும் உனது அழகிய

அனுபல்லவி

சுகசனகாதியரும் தேவரும் பிரமனும்
பகலவனும் சந்திரனும் இந்திரனும் பணியுமுன்

சரணம்

இகபரசுகம் தரும் மதுசூதனனே
சகம் புகழும் கேசவனே ஜகதீஸ்வரனே
ககனமும் புவனமும் போற்றும் தேவனே
பகலிரவும் திருவடி துதித்திடும் எனக்குன்


No comments:

Post a Comment