Saturday, 1 March 2014

ஸ்ரீ கோவிந்தன்





ஸ்ரீ கோவிந்தன்

பல்லவி 

கோவிந்தா கோவிந்தா கூவியழத்தேனே
நாவிலுன் நாமமே வாயார உரைத்து

அனுபல்லவி

தேவியரிருவர் மேவிடும் கேசவா
தேவகிமைந்தனே ஸ்ரீ வாசுதேவா

சரணம்

மூவாசைப் பிணியால் கட்டுண்டு தவிக்கும்
பாவியென் குறைகளுந்தன் காதில் விழவில்லையா
தேவாதிதேவனே சேவடி பணிந்த என்னை

தாவியணைத்திட மனமுனக்கில்லையா


No comments:

Post a Comment