Friday, 14 March 2014

தும்பிமுகப்பெருமான்





தும்பிமுகப்பெருமான்

பல்லவி

துயரிடர் வினைகளையும் தும்பிமுகப்பெருருமானை

தூவி மலர் சொரிந்து மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

இயலிசை நாடக நாட்டிய ரசிகனை

மயர்வற மதினலமுடையவனைக்கரிமுகனை

சரணம்

அயனரனரியும் அமரரும் கணங்களும்

மயில்வானனும் மறைகளும் போற்றும்

ஜெயம் தரும் கணபதியை கேசவன் மருகனை

தயவுடன் எனக்கருள வேண்டுமெனப் பணிந்து




No comments:

Post a Comment