Ente Krishna!
பல்லவி
உன்னையன்றி வேறு யார் என்னையாட்கொள்ளுவார்
சென்னகேசவா உன்னடி பணிந்தேன்
அனுபல்லவி
பன்னகசயனா பாற்கடல்வாசா
பவனபுரத்தரசே குருவாயரப்பா
சரணம்
என் தோழனே கண்ணா எனக்கருள்வாயே
புன்சிரிப்புடனே அனைவரையும் மயக்கும்
மன்னவனே மது சூதனனே முகுந்தா
உன்னிரு திருவடியே என்றும் எந்தன் துணை
No comments:
Post a Comment