ஹரே கிருஷ்ணா
பல்லவி
கண்ணா கண்ணா என்றுன் நாமமே துதித்தேன்
உண்ணாமலுறங்காமல் நோன்புகள் நூற்றேன்
அனுபல்லவி
வெண்ணை பால் தயிர் வேண்டியது படைத்தேன்
எந்நாளுமெப்போதும் உன்னையே நினத்தேன்
சரணம்
மண்ணைடயுண்ட வாயனே மதுசூதனனே
அண்ணன் கோயிலுறை திருநாராயணனே
புண்ணியனே கேசவா உன்னை நான் கூடும்
புண்ணிய நாளெந்நாளோ குருவாயுரப்பா?
No comments:
Post a Comment